ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 

News image
Updated On :10 ஜூலை 2023, 2:53 pm

DIN

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 

மது இல்லாத தமிழகத்தை உருவாக்கும் திட்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், மது இல்லாத தமிழகம் என்பது பாரதிய ஜனதாவின் கனவு மட்டுமல்ல தமிழக மக்களின் விருப்பமும் கூட. அதை நிறைவேற்ற பாஜக தகுந்த ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வகுத்துள்ளது. இது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

இது தொடர்பாக பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு தங்களை சந்தித்து திட்டத்தின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

வரும் ஜூலை 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி அல்லது இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாளில் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.