யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம் சுருளிஅருவி பாதையில்  யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் திங்கள்கிழமை தடை விதித்தனர். 
Published on

கம்பம்: தேனி மாவட்டம் சுருளிஅருவி பாதையில்  யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் திங்கள்கிழமை தடை விதித்தனர். 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க சென்றனர். அப்போது அருவிக்கு செல்லும் வழியில் உள்ள தேக்கங்காட்டில் 5க்கும் மேலான யானைகள் கூட்டமாக நின்றன. 

இதைபார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆர்வமடைந்து கைப்பேசி மூலம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

தகவல் கிடைத்ததும் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் சுற்றுலாப்  பயணிகளை வெளியேற்றினர். அருவிக்கு செல்லும் சாலையை அடைத்தனர். 

இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் யானைக்கூட்டம் வெண்ணியாறு செல்லும் வழியில் நின்றுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. 

இதுபற்றி கம்பம் கிழக்கு வனச்சரகர் வி.பிச்சைமணி கூறுகையில், தேக்கங்காடு மற்றும் வெண்ணியாறு செல்லும் வழியில் 5க்கும் மேலான யானைகள் கூட்டமாக நடமாடி வருகிறது. வழக்கமாக வரும் யானைகள் தான். தற்போது மழைக்காலம் என்பதால் கொசுத்தொல்லை அதிகம் இருக்கும். விரைவில் யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் சென்று விடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com