கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல: பழ.நெடுமாறன்

நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்குநல்லதல்ல என இந்திய தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறினார்.
கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல: பழ.நெடுமாறன்

நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது ஒருமைப்பாட்டுக்கு
நல்லதல்ல என இந்திய தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறினார்.

புதுவை மாநிலத்தில் பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப்
பாடத்திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுவதை நிறுத்தக் கோரி
புதுச்சேரி சாரம் பகுதியில் தமிழர் தேசிய முன்னணி புதுவைக் கிளை சார்பில்
ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பழ.நெடுமாறன்
செய்தியாளர்களிடம் கூறியதாவது

நம் நாட்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மாநில மொழிகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்பதே அரசியல் சட்டத்தின் கோட்பாடாக உள்ளது.

ஆனால், அதற்கு பிறகு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுப்பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் அவை செயல்படுத்தப்படுகின்றன.

தற்போது சிபிஎஸ்இ, நீட் தேர்வு போன்ற பலவித செயல்பாடுகள் மூலம் மாநில
மக்களின் கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பல்வேறு மொழிகள் பேசியும், பல்வேறு கலாசார பின்னணியும் கொண்டுள்ள நம் நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமைகளைப் பறிப்பது நாட்டின்
ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.

ஆகவே, எவ்வளவு விரைவில் மத்திய அரசு மாநிலக் கல்வி உரிமையை பறிப்பதால் ஏற்படும் பாதிப்பை உணர்கிறதோ, அந்தளவுக்கு நல்லது. ஆங்கிலேயர் காலத்தில் கூட அந்தந்த மாநில மக்களின் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு உணரவேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர்
துரைமால் இறைவன் தலைமை வகித்தார். அதன் தமிழ் மாநில தலைவர் முத்தமிழ்மணி, பொதுச்செயலர் நா.மு.தமிழ்மணி, பொருளாளர் மு.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுவையில் அவசர அவசரமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை செயல்படுத்துவதை அரசு நிறுத்தவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com