வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 14) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :12 ஜூலை 2023, 12:41 pm

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 14) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் வழக்கை ஒத்திவைத்தார். ஆட்கொணர்வு வழக்கில் ஜூலை 14-ல் விசாரணை முடிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரின் மனைவி மேகலா ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது. கடந்த திங்கள் கிழமை வழக்கு நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று வழக்கு நடைபெற்ர நிலையில், இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். செந்தில் பாலாஜி தரப்பில்  மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.

இதேபோன்று அமலாக்கத் துறை தரப்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்து நிறைவு செய்தார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வரும் 14ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.