டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: சு.முத்துசாமி                           

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். 
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: சு.முத்துசாமி                           

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர்  செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 218 ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது. விரைவில் பொல்லானுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180 மில்லி லிட்டர் புட்டியில் மது விற்கப்படுகிறது. அதை முழுமையாக குடிப்பதற்கு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே தான் அது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. டெட்ரா பேக் மதுவில் கலப்படம் செய்ய முடியாது. டாஸ்மாக் மது கடைகளை முன்கூட்டி திறக்கும் எண்ணம் இல்லை. காலை 7 முதல் 9 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் தவறான இடத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் ஆய்வு நடத்தப்பட்டது. டாஸ்மாக் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் பிரச்னை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டு தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு செல்லும். டாஸ்மாக் கடை பணியாளர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்.  அதற்கு கீழ் உள்ளவர்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படும். டெட்ரா பேக் ஆய்வில் தான் உள்ளது‌.

பெரும் பகுதியான கடைகளில் அதிகளவு விற்பனையாகும் மது குறித்து புள்ளிவிவரம் எடுக்கப்படுகிறது. இதன்படி பொதுமக்கள் எதிர்பார்க்கும் மதுவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் 15 இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் ‌என்றார். முன்னதாக அவர் பொல்லான் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com