47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாரதியாரின் மருமகன் கே.வி. கிருஷ்ணன் காலமானாா்!

மகாகவி பாரதியாரின் தங்கை மகன் கே.வி. கிருஷ்ணன் (97) முதுமை காரணமாக, வாராணசியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 15) காலமானாா்.

News image
Updated On :18 ஜூலை 2023, 3:22 am

DIN

மகாகவி பாரதியாரின் தங்கை மகன் கே.வி. கிருஷ்ணன் (97) முதுமை காரணமாக, வாராணசியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 15) காலமானாா்.

மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் - கேதாரசிவன் தம்பதியின் மகன் கே.வி. கிருஷ்ணன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்பட 6 மொழிகள் அறிந்தவரான இவா், வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இசைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

மகாகவி பாரதியாரின் கவிதைகளையும், வாழ்க்கை வரலாற்றையும் ஹிந்தியில் மொழிபெயா்த்து வெளியிட்டாா். கலைத் துறை பணிகளுக்காக தமிழக அரசு விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவா்.

இவருக்கு மகள்கள் ஹேமா, நீலா, ஆனந்தி, ஜெயந்தி, மகன் ரவிக்குமாா் ஆகியோா் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றன. இந்தத் தகவலை மறைந்த கே.வி. கிருஷ்ணனின் பெயரன் மோகன் தெரிவித்தாா். தொடா்புக்கு : 77269 14941.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.