ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

டிஐஜி விஜயகுமார் தற்கொலை: இரண்டு பேரிடம் விசாரணை

டி.ஐ.ஜி. தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் இன்று இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.

News image
கோவை சரக டிஐஜி விஜயகுமார்
Updated On :18 ஜூலை 2023, 12:45 pm

DIN


கோவை: டி.ஐ.ஜி. தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் இன்று இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 7-ம் தேதி முகாம் அலுவலகத்தில் கை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்-பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது  தொடர்பாக  சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில்,   டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதில் இன்று  கோவை, ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இன்று இரண்டு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துத் தெரிவித்திருந்த வாராகி மற்றும் ராஜவேல் நாகராஜ் என்ற இரண்டு நபர்களிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆஜரான இரண்டு பேரிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துகள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.