மேலும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் கடந்த 5-7-2023 அன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டதை தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள முதல்வர், 3-7-2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4-7-2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகத்துக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.