பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்! 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

News image
பெரிய நாயகி அம்மன்.
Updated On :20 ஜூலை 2023, 6:01 am

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை பெரியநாயகி அம்மன் உடனுறை வீரட்டானேஸ்வரர் கோயில் ஆடிப்பூர பிரம்மோற்சவத் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி மற்றும் ஆடிப்பூர பிரம்மோற்சவம் விழா முக்கியத்துவம் பெற்றது. நிகழாண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோற்சவத் திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Story image

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை மாடவீதியை வலம் வரும் திருத்தேர்.

விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாடவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை காலை சுமார் 8.30 மணி அளவில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலை 5.30 மணி அளவில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர் அருகே எழுந்தருளினார். அங்கு கோயில் குருக்கள் வேத மந்திரங்கள் கூறி பூஜைகள் நடத்தினர். 

இதையும் படிக்க | 

பின்னர், பெரியநாயகி அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, திரண்டிருந்த பெண்கள் தேரை வடம்பிடித்து மாடவீதி வழியாக இழுத்துச் சென்றனர். மீண்டும் தேர் நிலையை அடைந்தது.

தேர் திருவிழாவையொட்டி காவல், தீயணைப்பு மற்றும் மின் வாரியத்துறை ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் இடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.