விலைவாசி உயர்வு: ராணிப்பேட்டையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ராணிப்பேட்டையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ராணிப்பேட்டையில்  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

ராணிப்பேட்டையில் தக்காளி உள்பட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து மாவட்ட அதிமுக சார்பில் முத்துக்கடை காந்தி சிலை அருகே வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் காய்கறிகளை மாலைகளாக  அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com