ஆடி முதல் வெள்ளி: காஞ்சிபுரத்தில் கோயில்களில் பெண்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம்!

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி, அனைத்து திருக்கோயில்களிலும் பெண்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஆடி முதல் வெள்ளி: காஞ்சிபுரத்தில் கோயில்களில் பெண்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம்!

காஞ்சிபுரம்: கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி, அனைத்து திருக்கோயில்களிலும் பெண்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் காலை முதலே பெண்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தவும் அம்மனை தரிசனம் செய்யவும் வந்தனர்.

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஸ்ரீ தும்பவனத்து அம்மன் திருக்கோயில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகப் பொருட்கள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு பல வண்ண மலர்கள் சூடி படையல் இட்டு அம்மனுக்கு சிறப்பு தீபா ஆராதனை நடைபெற்றது.

முதல் வெள்ளிக்கிழமை நிகழ்வை காஞ்சி ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.

காலை முதலே திருக்கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் பொங்கல் இட்டு அம்மன் சன்னதி அருகே வைத்து நெய் தீபம் ஏற்றி தங்கள் குலம் செழிக்க வாழ்த்தி அருள வேண்டும் என வேண்டுதல் நிறைவேற்றினர்.

இது மட்டும் இல்லாமல் சாமி தரிசன மேற்கொள்ள நீண்ட வரிசையில் மாவிளக்குடன் காத்திருந்து அம்மனை தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை நிகழ்வையொட்டி, காஞ்சி ஒன்றிய அதிமுக சார்பில் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com