மணிப்பூர்: ஜூலை 23ல் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பெண்கள் வன்முறை தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் வருகிற ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
மணிப்பூர்: ஜூலை 23ல் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பெண்கள் வன்முறை தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் வருகிற ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினா் அந்தஸ்து பெற போராட்டம் நடத்தினர். இதற்கு குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், குகி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ கடந்த புதன்கிழமை இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திமுக துணைப்  பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் வருகிற ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஜூலை 24 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com