மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பல்கலை., கல்லூரிகளில் ஒரே  பாடத்திட்டம்: பொன்முடி

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2023, 8:14 am


சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று  தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது, உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும்  பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை உலகளவில் உயர்த்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். இதனால், கல்லூரிகளிலிருந்து வேறு கல்லூரிக்கு மாறும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உதவியாகஇருக்கும்.

காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். கல்லூரிகளில் காலியாக இருக்கும் 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.20 ஆயிரம், இனி ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.