மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மணிப்பூர் கொடூரம்: தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :24 ஜூலை 2023, 7:58 am

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணி சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதில் சமீபத்தில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதுபோன்று அங்கு மேலும் பல பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

Story image

இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

Story image

இந்நிலையில் திமுக துணைப்  பொதுச் செயலாளரும் மகளிர் அணித் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் நேற்று(ஞாயிறு) சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இன்று(திங்கள்) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்று வருகிறது. 

Story image

இதில் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.