காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை!

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தமிழ்நாடு மகளிர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

News image
Updated On :25 ஜூலை 2023, 3:03 pm

DIN

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தமிழ்நாடு மகளிர் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பை 2023 நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். 

இதில், தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில், ரூ.60 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

27-ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹரியாணா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.