கார்கில் வெற்றி நாளையொட்டி திருச்சியில் கார்கில் வீரர் சரவணனின் நினைவுத் தூணுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் 3 மாதங்களாக போர் நடைபெற்றதில் இந்தியா வெற்றி பெற்றது. போர் வெற்றி நாளான ஜூலை 26 'கார்கில் விஜய் திவாஸ்' என கடைப்பிடிக்கப்படுகிறது.
கார்கில் வெற்றி நாளையொட்டி தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2 நாள் பயணமாக திருச்சி வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கார்கில் வீரர் சரவணனின் நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சி சமயபுரம் அருகே புறத்தாக்குடி கிராமத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை பார்வையிடும் முதல்வர் இன்று மாலை திருச்சியில் திமுக நிர்வாகிகளுடன் பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து நாளை திருச்சியில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

