
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகே கூரை வீட்டில் சமையல் எரிவாயு வெடித்ததில் வெள்ளிக்கிழமை இரவு 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆக்கூர் அருகே மடப்புரம் ஊராட்சி பெரியசாவடி குளம் தெருவைச் சேர்ந்தவர் கலைவாணன்(40). அவரது தந்தை முத்தையன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு வெள்ளிக்கிழமை இரவு திடிரென தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க அக்கம் பக்கத்தினர் ஈடுபட்டபோது சிலிண்டர் வெடித்தது.
இதில் அ. ஜெயப்பிரதாப் (40), அ.ஜெயக்குமார் (45), க.மணிமாறன் (48), ஜி. ஜெகதீஷ் ( 27), ரா.வினோத் ராஜ்( 34), அ. ராஜேஷ் (36), சி.இளையபெருமாள்( 43), ஜெ. மதன் (19), வெ.பிரேமா( 28), கலியபெருமாள் (68), சுரேஷ்குமார( 19), நடராஜன்(23), கருணாநிதி(48), சுரேஷ் ( 40), சரவணன்( 48) உள்ளிட்ட 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த கருணாநிதி, சுரேஷ், சரவணன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சங்கரன்கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
இச்சம்பம் குறித்து செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.