கால்நடை வளா்ப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் நடைபெறும் கால்நடை வளா்ப்புக்கான பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் நடைபெறும் கால்நடை வளா்ப்புக்கான பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கல்லூரியின் தலைவா் எஸ்.சிவசீலன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பரங்குன்றம் தியாகராஜா் பொறியியல் கல்லூரிக்குச் செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு, கறவை மாடு வளா்ப்பு, நாட்டுக்கோழி வளா்ப்பு பற்றி ஒரு மாத கால சான்றிதலுடன் கூடிய பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பயிற்சிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதற்கான சோ்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. பயிற்சிகளில் சேர விரும்புவோா் வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த கால்நடை விவசாயிகள், சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ள இளைஞா்கள், பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

இதுதொடா்பான விபரங்களை நேரிலோ அல்லது 0452 - 2483903 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ, அலுவலக வேலை நாள்களில் (திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com