
சென்னை: மணிப்பூர் வன்முறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிழக்கு பதிப்பக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறை குறித்து “அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பத்ரி சேஷாத்ரி, மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதையும் படிக்க | சென்னையில் நிலநடுக்கம்!
இந்த நிலையில் வழக்குரைஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீசார், இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக, இந்திய தண்டனைச் சட்டம் 153, 153ஏ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.