தேங்காய் விலை வீழ்ச்சி: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம்!

தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது
திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் என்எஸ்பி வெற்றி.
திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் என்எஸ்பி வெற்றி.

திருப்பூர்: தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து திருப்பூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூரில் உள்ள கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பங்கேற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், மாநில செயல்தலைவர் என்எஸ்பி வெற்றி ஆகியோர் கூறியதாவது:

தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து திருப்பூர், கோவை, கரூர், சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க, கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி விவசாயிகளிடம் இருந்து கொப்பரைத் தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் தலைமைச் செயலகம் முன்பாக தேங்காய் உடைக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர். இந்த சந்திப்பின்போது, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com