ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்

ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். 
ராமநாதசுவாமி கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம்


ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்துகொண்டார். 

இதனைதொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலையில் ராமநாதசுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த அமித்ஷாவை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரன் வரவேற்றார். இதன் பின்னர் கோயில் இணை ஆணையர் ச.மாரியப்பன் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். 

இதன் பின்னர் கோயிலுக்குள் சென்று ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். 

கோயில் வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்த அமித் ஷா.

இதனைத்தொடர்ந்து, கோயில் வருகை பதிவேட்டில் ராமமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது தொர்பாக எழுதினார்.

ராமநாதசுவாமி கும்பிட்டு விட்டு பர்வதவர்த்தினி அம்மனை தரிசித்தேன். இங்கு கோடிக்கணக்கான மக்கள் மன அமைதிக்காக சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

ராமேசுவரம் ஒரு புண்ணிய பூமி "கடல் எந்த அளவு ஆழமாக உள்ளதோ அந்த அளவு மன அமைதியாக உள்ளது” என தனது கருத்தை அவர் பதிவு செய்தர்.

இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி  மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com