மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதியதில் ஊழியர் பலி 

மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதியதில் டோல்கேட் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதியதில் ஊழியர் பலி 

மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதியதில் டோல்கேட் ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆந்திர மாநிலத்திலிருந்து இருந்து கேரளம் மாநிலம் நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தகொண்டிருந்தது. மதுரை கருப்பாயூரணி பிசி பெருங்காய சந்திப்பு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்த லாரி திடீரென பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இந்த நிலையில் லாரியை நிறுத்த முயன்றபோது லாரி வண்டியூர் டோல்கேட் உள்ளே புகுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த மதுரை வண்டியூர் எல்.கே.டி நகர் பகுதியைச் சேர்ந்த சதிஷ் என்ற 25 வயது ஊழியர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதனைத் தொடர்ந்து லாரி அடுத்தடுத்து எதிரே வந்த கார் மற்றும் பைக்குகள் மீது மோதியதில் மூன்று பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரிசி ஏற்றி வந்த கனரக லாரி திடீரென டோல்கேட்டில் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com