சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் எப்போது?

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும்.

சென்னை - திருநெல்வேலி இடையே தற்போது 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் ‘வந்தே பாரத்’ ரயில் 8 மணி நேரத்தில் சென்றடையும். திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயிலான ‘வந்தே பாரத்’ இன் முதல் சேவை 15.02.2019 தில்லி - வாரணாசி இடையே தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே கடந்த ஏப்.8-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com