
கோவையில் கருமத்தம்பட்டியில் விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரப் பலகை சரிந்து விழுந்து 3 பேர் பலியான நிலையில், கருமத்தம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலந்த காற்று வீசியதால் விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததா அல்லது பணியின்போது சரிந்து விழுந்ததா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பலியான மூவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் விளம்பரப் பலகை அமைக்கும் தொழிலாளிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களின் பெயர் குணசேகரன் வயது (52), குமார் (50), குமார் (35) என்று காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவை நாடியுள்ளோம்: தில்லி முதல்வர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.