புதுச்சேரியில் ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 14ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  
புதுச்சேரியில் ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 14ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

புதுவையில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோடை வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் தமிழகத்தைப் போல, புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, வருகிற 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை அறிவித்தது. 

இதனிடையே, புதுவையில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும். வருகிற 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி 1-12 வரையான வகுப்புகளுக்கு வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com