விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநில வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை: ஆளுநருக்கு மு.க. ஸ்டாலின் பதில்!

தமிழ்நாட்டின் தற்போதைய வளர்ச்சி என்ன என்பது ஒருவருக்கு புரியவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின்

Updated On :6 ஜூன் 2023, 1:32 pm


தமிழ்நாட்டின் தற்போதைய வளர்ச்சி என்ன என்பது ஒருவருக்கு புரியவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது, உள்ளூர் முதலீடுகளை கவர வேண்டும் என குறிப்பிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து ஆளுநர் நேற்று விமர்சித்திருந்த நிலையில், முதல்வர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்துவைக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 6) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர், கல்வியும், மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள். உலக அமைப்பே பாராட்டும் வகையில் மக்களை நோக்கி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

மாநில வளர்ச்சி ஒருவருக்கு தெரியவில்லை, மக்களை குழப்பும் வகையில் பேசிவருகிறார். 

சுகாதாரத்தில் தேசிய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.