தென்மேற்குப் பருவமழை: உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கடலோர காவல்படை, பேரிடர் மேலாண்மைத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, ஒரு வாரக் கால தாமதத்துடன் கேரளத்தில் நேற்று தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக கேரளத்தின் 9 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...