வரும் 14ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் 2 மடங்கு உயர்வா?

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 14ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் கட்டணம் 2 மடங்கு உயர்வா?


சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் எந்த பகுதிக்கும் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. 

இதனால் பயணிகள் பலர் இரு சக்கர வாகனங்களில் தொலைதுரங்களுக்கு செல்வதை தவிரித்துவிட்டு மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் இரு சக்கர வானங்களை நிறுத்திவிட்டு செல்கிறார்கள். 

இதற்கு பார்க்கிங்க் கட்டணமாக ஆறு மணி நேரத்திற்கு ரூ.10, 12 மணி நேரத்திற்கு ரூ.15 ஆக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதனையடுத்து மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் 6 மணி நேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் ரூ.20, 12 மணி நேரத்திற்கு ரூ.30, 12 மணி நேரத்திற்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. 

மாதாந்திர பார்க்கிங்க் கட்டணம் 6 மணி நேரத்திற்கு ரூ.500 இல் ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்திற்கு ரூ.1000 இல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com