சென்னை: பயணச்சீட்டு எடுக்கக் கூறிய அரசுப் பேருந்து நடத்துநருக்கு வெட்டு
சென்னை வண்ணாரப்பேட்டையில் பயண சீட்டு எடுக்கக் கூறிய அரசு பேருந்து நடத்துனரை வெட்டிய நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னை வண்ணாரப்பேட்டையில் பயண சீட்டு எடுக்கக் கூறிய அரசு பேருந்து நடத்துனரை வெட்டிய நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் பரப்பில் கூறப்பட்டதாவது:- சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகரை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பழைய வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் சிக்னல் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது, இரு நபர்கள் ஏறினர்.
அந்த நபர்களிடம், பேருந்து நடத்துநர் சூளைமேடு-ஆத்ரேயபுரம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த த.ஜெகதீசன் (56) என்பவர் பயணச் சீட்டு எடுக்கும்படி கூறினார்.
அப்போது அவர்கள் இருவரும், எங்களை எப்படி பயணச்சீட்டு எடுக்க கூறலாம் என்று தகராறு செய்தனர். தகராறு முற்றவே அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஜெகதீசனை வெட்டினர்.
இதை பார்த்த பயணிகள் சத்தமிட்டு அலறினர். உடனே அந்த நபர்கள், ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து இறங்கி தப்பியோடினர். இச் சம்பவத்தில் காயம் அடைந்த ஜெகதீசன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீசன் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...