போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: சென்னிமலை, பெருந்துறையில் முழு அடைப்பு!

கீழ் பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்திற்கு எதிராக போரடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை, பெருந்துறை  திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
பெருந்துறையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்
பெருந்துறையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள்


ஈரோடு: கீழ் பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்திற்கு எதிராக போரடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை, பெருந்துறை திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இங்கு விசைத்தறி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. 

கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒரு தரப்பினர் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் வாய்காலில் பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேட்டில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் முருங்கத்தொழுவு ரவி தலைமையில் திங்கள்கிழமை 6 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.     

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பெருந்துறையில் வியபாரிகள் முழு அடைப்பு போராட்டம்

இந்நிலையில், சென்னிமலை வட்டார பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு திங்கள்கிழமை அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் சென்னிமலை வட்டாரத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. 

சென்னிமலை டவுன் மற்றும் வெள்ளோடு, ஈங்கூர் மட்டும் அல்லாது கிராம புறங்களிலும் எந்த மளிகை, காய்கறிகடை, பால் கடை, உரக்கடை, டீ கடைகள், உட்பட சிறிய பெட்டிகடை முதல், பெரிய  பல்பொருள அங்காடி வரை எதுவும் திறக்கப்படவில்லை, விவசாயிகள் போராட்டத்திற்கு வியபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளுக்கு விடுமறை கொடுத்துள்ளனர். மருத்து கடைகள் மட்டும் செயல்படுகிறது.  

மேலும், போராட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னிமலை பால்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பாக ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பால் விற்பனை நிலையங்கள் இயங்காது என அறிவித்துள்ளனர். 

சென்னிமலையில் மூடப்பட்டுள்ள விசைத்தறிக்கூடம்
 

விசைத்தறியாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சென்னிமலை நான்காயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்க வில்லை. ஏதுவும், இயங்காத நிலையில் சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, சென்னிமலை வட்டாரத்தில் உள்ள பிரதம கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழக்கம் போல் இயங்கின.  

இதுபோல் பெருந்துறை, காஞ்சிகோவில், திங்களூர், நசியனூர் பகுதிகளில் 75 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com