ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின்  நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

News image
Updated On :13 ஜூன் 2023, 3:14 am

DIN

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின்  நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335வது நாளாக 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

துவக்கத்தில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 867 கன அடியிலிருந்து வினாடிக்கு 579 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியிலிருந்து 102.86 அடியாக சரிந்தது.

அணையின் நீர் இருப்பு 68.59 டி.எம்.சியாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.