பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கிறது?- மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :14 ஜூன் 2023, 11:02 am IST


சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். 

நள்ளிரவையும் கடந்து நீடித்த சோதனையின் முடிவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை
அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில், நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் செந்தில் பாலாஜி கூறினாா்.

இதையும் படிக்க | செந்தில் பாலாஜி பேசவே சிரமப்படுகிறார்:  மருத்துவமனையில் பார்த்த நேரு தகவல்!
 
இதையடுத்து அவரை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோ்த்தனா்.

இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த அழுத்தம், நெஞ்சுவலி காரணமாக இதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்துடிப்பு, உடசலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இரண்டு முதல் 3 நாள்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படலாம் எனவும், சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியானது. 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், புதன்கிழமை பிற்பகலில் ஆஞ்சியோகிராம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.