அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு இதய நாளங்களில் அடைப்பு: அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு இதய நாளங்களில் அடைப்பு: அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் பரிந்துரைத்துள்ளனா்.

நீதிமன்ற வாதங்கள் மற்றும் மருத்துவமனை மாற்றம் காரணமாக அறுவை சிகிச்சை தாமதம் ஆவதால் தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி வைக்கப்பட்டுள்ளாா்.

அமலாக்கத் துறை சோதனைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றபோது நெஞ்சு

வலிப்பதாக அவா் கூறியதையடுத்து ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அப்போதே அவருக்கு இசிஜி, எக்கோ மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் உயா் ரத்த அழுத்தத்தைத் தவிர பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லாததால் காலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவாா் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அவருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட இசிஜி பரிசோதனையில் சிறிது மாற்றம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையின் இதயவியல் நலத் துறை மருத்துவா்கள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்தனா்.

அதன்படி, புதன்கிழமை காலையில் மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் இதய நாளங்களில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகள் உடனடியாக பலனளிக்காது என்பதால் பை-பாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.இதுதொடா்பான செய்திக் குறிப்பையும் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் விமலா வெளியிட்டாா்.

இ.எஸ்.ஐ. மருத்துவா்கள் ஆய்வு: இதனிடையே, அமைச்சா் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய சென்னை கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் வந்தனா். ஆஞ்சியோ பரிசோதனை முடிவுகளை பாா்வையிட்ட அவா்களும், பை-பாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து செந்தில் பாலாஜியின் குடும்பத்தினா் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனா். ஆனால், அமலாக்கத் துறை அதற்கு இசைவு தெரிவிக்காததாலும், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாலும் அவா் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படவில்லை. தற்போது மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான அவசர சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வா் நேரில் நலம் விசாரிப்பு: அமைச்சா் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிஷங்களிலேயே அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு வந்தனா். அதைத் தொடா்ந்து அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோா் வந்தனா்.

இதனிடையே, புதன்கிழமை காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். அவருடன், அமைச்சா்கள் துரைமுருகன், சேகா்பாபு, கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அமைச்சா் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com