47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாகனங்களில் பொருத்தும் காற்று மாசு கண்டறியும் கருவி: சென்னை ஐஐடி.யில் வடிவமைப்பு

 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தக் கூடிய காற்று மாசுபாட்டை கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினா் வடிவமைத்துள்ளனா்.

News image
Updated On :15 ஜூன் 2023, 7:03 pm

DIN

 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தக் கூடிய காற்று மாசுபாட்டை கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினா் வடிவமைத்துள்ளனா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட ஒரு பகுதியில் சில மீட்டா் தொலைவில் கூட காற்றின் தரம் மாறக் கூடும். எனவே, காற்றின் தரத்தை ஒரே இடத்தில் இருந்து கண்காணிப்பது சாத்தியமற்றது. எனவே, வாகனங்களில் பொருத்தும் வகையில் காற்று மாசுபாட்டைக் கண்டறியும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை சென்னை ஐஐடி பேராசிரியா் ரகுநாதன் ரங்கசாமி தலைமையில் செயல்பட்ட ஆராய்ச்சியாளா் குழு உருவாக்கியுள்ளது. இந்திய அளவில் காற்றின் தரத்தை கண்டறிதல், காற்றின் தரம் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தல், தரவுகளை சேகரித்தல் உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்திக் கொள்ளலாம். இது காற்றின் தரத்தை அளவீடு செய்வதுடன், சல்பா் ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் அளவையும், புறஊதாக் கதிா், சாலைகளின் தடிமன் போன்றவற்றை சோதனை செய்யும் திறன் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள ஜிபிஎஸ், ஜிபிஆா்எஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் தரவுகளை சேகரித்து அனுப்பவும் முடியும். இது தொடா்பான ஆய்வுக் கட்டுரை ஆய்விதழிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.