அரிக்கொம்பன் யானை: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரிக் கொம்பன் யானையை மதிகெட்டான் சோலையில் விடும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அரிக் கொம்பன் யானையை மதிகெட்டான் சோலையில் விடும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 
களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யானை நலமாக உள்ளது, 
அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என வனத்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. யானையை எங்கு விட வேண்டும் என்பதை நிபுணத்துவம் பெற்ற வனத்துறையே முடிவு செய்யும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் அரிக்கொம்பன் யானையை மதிகெட்டான் சோலையில் விடும் கோரிக்கையை நிராகரித்தது. 
அத்துடன் கேரளத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com