மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாட்களில் 2.42 அடி சரிந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 522 கன அடியிலிருந்து வினாடிக்கு 406 கன அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஜூன் 12 ஆம் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 100.93 அடியாக சரிந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.42 அடி சரிந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 66.05 டி.எம்.சி ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...