ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

339 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே சரிந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 339 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்குக் கீழே சரிந்தது.

News image
Updated On :17 ஜூன் 2023, 8:07 am

DIN

மேட்டூர் அணை நீர்மட்டம் 339 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்குக் கீழே சரிந்தது.

கடந்த நீர்ப் பாசன ஆண்டு காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை அடுத்து 2022-ம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. பின்னர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாகவும் நீர்வளத் துறை அதிகாரிகளின் நீர் மேலாண்மை காரணமாகவும் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று பிற்பகல் வரை தொடர்ந்து 339 நாட்களாக 100 அடியாக நீடித்து இருந்தது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 651 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. 

இன்று பிற்பகலில் 339 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 99.90 அடியாக சரிந்தது.

இதற்கு முன்பு 2005 - 2006-ம் ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 428 நாட்கள் தொடர்ந்து 100 அடியாக நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.