ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் 3.04 அடி சரிவு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

News image
Updated On :17 ஜூன் 2023, 3:16 am

DIN

மேட்டூர்: கடந்த 5 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3.04 அடி சரிந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 406 கன அடியிலிருந்து வினாடிக்கு 651 கனாடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஜூன் 12 ஆம் தேதி 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 100.29 அடியாக சரிந்து உள்ளது.

கடந்த 5 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3.04 அடி சரிந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 65.21 டி.எம்.சி ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.