ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஜூன் 2023, 12:00 pm

DIN

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து பதிவு:

“சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்ற நம் முன் நெடும்பயணம் காத்திருக்கிறது. இருவரும் இணைந்தே நடைபோடுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.