

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக கோவை மாவட்ட கழக நிர்வாகிகள், நகர ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலை குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.