திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து போராட்டம்

திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து போராட்டம்

திருப்பூர்: திருப்பூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 ஆவது வார்டில் ஜம்ஜம் நகர், பழகுடோன்,வெங்கடேஸ்வரா நகர்,கோம்பை தோட்டம் ஆகிய பகுதிகளில 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  வார்டில் மாநகராட்சி சார்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பு  சார்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடியேற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 ஆவது வார்டு மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க மறுக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்து மக்கள் நலன் நாடு, மாற்று இடம் தேடு என வலியுறுத்தி வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

மாநகராட்சி மேயர் மாமன்ற கூட்டத்தில் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளன இது என கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

இது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டால். மாநகராட்சி நிர்வாகத்தினர் 45 ஆவது வார்டுகளில் மாநகராட்சி சார்பில் எந்த விதமான அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாது என மிரட்டல் விடுக்கின்றனர். இந்த திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றவில்லை எனில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி அலுவலகத்தை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com