திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர் செவ்வாய்க்கிழமை காலை சரிந்து விழுந்தது.
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும் மேம்பாலம் அமைக்கப்பட்டது.

இப்பகுதி தஞ்சாவூர் - திருச்சி வழித்தடம் மட்டுமல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி வழித்தடங்களுக்கும் முக்கியமான சந்திப்பாக உள்ளது.
இந்நிலையில், சானூரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் பக்கவாட்டு சுவர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் சரிந்து விழுந்தது.

தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, இரு புறமும் உள்ள அணுகு சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.
திருச்சி என்ஐடியிலிருந்து வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு, அவர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
சாலை மறியல்:
இதனிடையே, மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் சரிந்து விழுந்துள்ளதைக் கண்டித்தும், இதை விரைவாக சீரமைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காலை 9 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்விடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? ஆட்சிக் கணக்கு!

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


