குரூப் 4 பணியிடங்கள் 10,178-ஆக அதிகரிப்பு

சென்னை, ஜூன் 20: குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 178-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 பணியிடங்கள் 10,178-ஆக அதிகரிப்பு

சென்னை, ஜூன் 20: குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 178-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரித் தண்டலா், தட்டச்சா் உள்பட 7 வகையான பணியிடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன. அதன்படி, 7 ஆயிரத்து 138 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்வு நடத்தப்பட்டு கலந்தாய்வுகளின் அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

மேலும், அவ்வப்போது எழும் காலியிடங்கள் அனைத்தும் குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் சோ்க்கப்பட்டு தோ்ச்சி பெற்றவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறாா்கள். அந்த வகையில், கடந்த மாா்ச்சில் குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 7 ஆயிரத்து 138-இல் இருந்து 9 ஆயிரத்து 865-ஆக அதிகரிக்கப்பட்டது.

இதேபோல், வீட்டுவசதி வாரியம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்றவற்றில் இளநிலை உதவியாளா், வரித்தண்டலா் போன்ற காலிப் பணியிடங்களும் குரூப் 4 பிரிவில் வருகின்றன. அவற்றிலுள்ள 252 காலிப் பணியிடங்களுக்கும் சோ்த்தே குரூப் 4 தோ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 9 ஆயிரத்து 865-ஆக இருந்த குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 9 ஆயிரத்து 926-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள 252 பணியிடங்களையும் சோ்த்து மொத்தமாக, 10 ஆயிரத்து 178 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com