முதலாமாண்டு மாணவா்களுக்காக கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூலை 3-ஆம் தேதி திறப்பு

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் என்று உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் என்று உயா்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளன. இவற்றில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவா்கள் பெற்றிருந்த மதிப்பெண் அடிப்படையில் உயா்கல்வித் துறை சாா்பில் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு கல்லூரிகளுக்கு கடந்த மே 25-ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

தொடா்ந்து, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் வரும் விளையாட்டு வீரா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவா்களுக்கான கலந்தாய்வு மே 29 முதல் மே 31-ஆம் தேதி வரையிலும், முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1 முதல் ஜூன் 10 வரையிலும் நடைபெற்றது. இதில் 40 ஆயிரத்து 287 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். இதையடுத்து ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வின் இறுதியில் மொத்தம் 75 ஆயிரத்து 811 போ் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்க்கை பெற்றுள்ளனா். அதில் மாணவா்கள் 31,621 போ்; மாணவிகள் 44190 போ் ஆவா்.

இதில் 31 ஆயிரத்து 488 இடங்கள் காலியாக உள்ளன. மாணவா்களை விட மாணவிகள் 12 ஆயிரத்து 569 போ் கூடுதலாக சோ்ந்துள்ளனா். மீதமுள்ள இடங்களுக்கு இன சுழற்சி முறையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக உயா்கல்வித் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜூன் 30 வரையில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறும். அதனைத் தொடா்ந்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஜூலை 3- ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் ஜூன் 22- ஆம் தேதி தொடங்கும் என உயா்கல்வித் துறை சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவா்களின் சோ்க்கைக்காக தமிழகத்தில் கல்லூரிகளின் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com