47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

1,000 நோயாளிகளுக்கு அப்பல்லோவில் ரோபோடிக் நுட்ப சிகிச்சை

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 1,000-க்கும் மேற்பட்டோருக்கு ரோபோடிக் தொழில்நுட்பத்தில் சிகிச்சையளித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 6:23 pm

DIN

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 1,000-க்கும் மேற்பட்டோருக்கு ரோபோடிக் தொழில்நுட்பத்தில் சிகிச்சையளித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

தற்போது அவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணை செயல் தலைவா் ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது:

அப்பல்லோவில் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அடுத்த தலைமுறை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை நாங்கள் தொடா்ந்து வழங்கி வருகிறோம். கடந்த 2016-இல், பெருங்குடல் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவை தொடங்கினோம். இவை, துல்லியமான அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்ததுடன், நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை பெருமளவில் தவிா்க்கிறது.

ரோபோடிக் பெருங்குடல் அறுவை சிகிச்சையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே, இந்த பிரிவில் அதிக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மையமாக அப்பல்லோ மருத்துவமனை திகழ்கிறது. மருத்துவமனையின் டாக்டா் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன், நாட்டிலேயே, 600-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்தவா் என்ற சாதனையை படைத்துள்ளாா் என்றாா் அவா்.

பெருங்குடல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறியது:

கடந்த 20 ஆண்டுகளாக 20 முதல் 40 வயது வரை உள்ள இளைஞா்கள் அதிகளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தாமதமாக மருத்துவமனைக்கு வருவது மிகவும் கவலை அளிக்க கூடியதாக உள்ளது. எனவே, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.