சென்னையில் பல இடங்களில் கனமழை!
சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அம்பத்தூர், கோயம்பேடு, தேனாம் பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூன் 22 முதல் ஜூன் 26 வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மெரினாவில் பேனா சின்னம்: மத்திய அரசு ஒப்புதல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...