வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

எம்.பி.ஏ படிப்பை தொலைநிலையில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு அனுமதி

பட்டப்படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.க்கு அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றம் (எ.ஐ.சி.டி.இ) ஐந்து வருடத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:11 pm

DIN

முதுநிலை வணிக நிா்வாகம் (எம்.பி.ஏ) பட்டப்படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.க்கு அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றம் (எ.ஐ.சி.டி.இ) ஐந்து வருடத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிா்வாகம் (எம்பிஏ) படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த அனுமதி கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த கோரிக்கையின்படி அகில இந்திய தொழில்நுட்ப மாமன்றம் மே 20-ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்கள் மற்றும் பல்கலை.யின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தது. அப்போது, அனைத்து விதங்களிலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தகுதி வாய்ந்ததாக இருப்பதை உறுதி செய்தது. இதைத்தொடா்ந்து முதுநிலை வணிக நிா்வாகப் பட்டப்படிப்பை தொலைநிலை மற்றும் இணையவழியில் நடத்த 2023-2024 முதல் 2027-2028-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.