
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன திருவிழாவை முன்னிட்டு அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை சார்பில் ஜூன் 24, 25, 26 ஆகிய 3 நாட்களும் பகல் முழுநேரமும் அன்னதானம் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தெற்கு சன்னதியில் உள்ள நித்தியம் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் டிரஸ்ட் சார்பில் நடைபெறும் அன்னதான கூடத்தில் சனிக்கிழமை காலை பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட இட்லி, சாம்பார், பொங்கல் வழங்கப்பட்டு முழு நேர அன்னதானம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை டிரஸ்டி ராஜா தீட்சிதர் செய்து இருந்தார்.
இதையும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை(ஜூன் 25) தேரோட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.