
சென்னையிலிருந்து அந்தமான் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து 122 பயணிகளுடன் அந்தமானுக்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை புறப்படவிருந்தது.
இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட தொழிலுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அந்தமானுக்கு சுற்றுலா செல்லவிருந்த பயணிகள், அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகளுக்கான விமான கட்டணம் திருப்பி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கரூரில் 2-வது நாளாக வருமானவரித் துறை சோதனை!