
கரூர்: கரூரில் வருமானவரித் துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான சிவசக்தி மெஸ் கார்த்திக், ரமேஷ் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் உதவியாளர் பெரியசாமி ஆகியோரது வீடுகள் உள்பட ஏழு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக கரூரில் ஜவகர் பஜாரில் செயல்படும் பிரபல நகைக்கடையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.